இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது.
மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசாரணை.
இலங்கையிலிருந்து நேற்று மதியம் மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை பரிசோதனை செய்தனர். அப்போது ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52,, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8, என மொத்தம் 64 வன உயினங்கள் கொண்டு வரப்பட்டது.
தெரியவந்தது.
இதுகுறித்து பிரிவினர் வேலூர் பயணியிடம் விசாரித்த போது இலங்கையில் இருந்து புறப்படும் போது ஒரு நபர் என்னிடம் இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும் அதை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் விசாரணையை தொடர்ந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை நீதி மன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக