60 இலட்சம் மதிப்புள்ள இரத்தின கற்களை பறித்துச் சென்ற 7 நபர்களை விரைந்து பிடித்த தனிபப்படையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ். வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இராமநாதபுரத்தில் விற்பனைக்காக ரூ.60 லட்சம் மதிப்பிலான அலெக்ஸாண்டர் ஜாதிக்கல்லை (ரத்தின கல்) கொண்டு வந்த வியாபாரியை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற ஆறு பேர் கைது 60 இலட்சம் மதிப்புள்ள இரத்தின கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது.
மதுரை மாவட்டம் கட்சைகட்டி பெருமாள் நகர், , பெ.பெருமாள், மகன் முனியசாமி என்பவர் கடந்த 30 வருடங்களாக நகைகளில் ஜாதிகற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 24.01.2025-ம் தேதி சிவகாசியை சேர்ந்த புரோக்கர் ஜாகிர் என்பவரிடம் தன்னிடம் விலை மதிப்பு தெரியாத 7 கிராம் அலெக்ஸ்சான்டர் கல் ரசீதோட விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்ததும், திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை அறிமுகப்படுத்தியதாகவும் ரவி என்பவர் அபுதாஹிர் என்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள இரயில்வே கேட்டுக்கு வரச்சொன்னதின் பேரில் அங்கு வந்தவரை 7 நபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.60,000,00/- லட்சம் மதிக்கதக்க அலேக்ஸாண்டர் ஜாதிக்கல்லையும், அதன் ரசீது, போன் மற்றும் ரூ.15000/-பணத்தையும் அச்சுறுத்தி பறித்து விட்டு சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் நகர் காவல் நிலைய குற்ற எண் 42/2025 பிரிவு 140(1), 296(b), 311 BNS ஆகிய பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர் .இதில் 1)பெரியகுளம்அபுதாஹிர் (எ) அபு (எ) ஹகிம், த/பெ.முகமது அப்துல் காதர், , தேனி, 2)முகமது அசாருதீன் (39), த/பெ.அகமது உசேன், 16-A பெரிய சிக்கந்தர் தெரு, இளையான்குடி, சிவகங்கை, 3)முகமது நவுபால், த/பெ.செய்யது இபுராஹிம், இளையான்குடி, 4)முத்துசெல்வம், த/பெ.சோலையப்பன், 5-87 சூசைநகர், முத்தையாபுரம், தூத்துக்குடி, 5)கனகராஜ் (25), த/பெ.காசிபாண்டி, 7-A 15-A தாளமுத்துநகர், தூத்துக்குடி, 6)கனகராஜ், த/பெ.கருப்பசாமி, 7-A/53, இந்திராநகர், தாளமுத்துநகர், தூத்துக்குடி, 7)ராஜா ஜோஸ்குமார், த/பெ.நெல்சன், 288-A மேற்கு தெரு, அத்திரமரப்பட்டி, தூத்துக்குடி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.60,000,00/- மதிப்புள்ள இரத்தினகற்கள், ரூ.15000/- பணம் மற்றும் மோடோ செல்போன்-1 ஆகிய சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக