அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வரப்பாளையம், கோபி, அம்மாபேட்டை, கொடுமுடி, கருங்கல்பாளையம் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்களான பான்மசாலா, குட்கா பொருள்களை தங்களது கடைகளில் விற்பனை செய்த நம்பியூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (74), கோபி, குள்ளம்பாளையத்தை சேர்ந்த தேன்மொழி (45), பவானியை அடுத்துள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்த முருகேசன் (45), கொடுமுடி, சின்னசமுத்திரத்தை சேர்ந்த விஜயலட்சுமி (38), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், மேட்டுக்கடையை சேர்ந்த மெய்யப்பன் (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து, சுமார் 5.5 கிலோ கிராம் எடையிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் குமார், பவானி தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக