ராணிப்பேட்டை மார்ச் 14 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு முப்பதுவெட்டி ஊராட்சியில் ஐந்து குடும்பத்தினருக்கு மாற்று இடம் தராமலேயே வீடுகளை காலி செய்ய நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சி வேளாளர் தெருவை சேர்ந்தவர்கள் ராஜம்மாள் க/பெ கிருஷ்ணமூர்த்தி, மகாதேவன் த/பெ சின்னையாபிள்ளை, சாமுண்டீஸ்வரி க/பெ மண்ணு, சங்கர் த/பெகிருஷ்ணமூர்த்தி, மாரி த/பெ தனிகாசலம் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சுமார் 33 வருடங்களாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்பு பகுதிக்கு மின் இணைப்பு குடிநீர்வசதி, வீட்டு வரி ஆதார்கார்டு, ரேஷன் கார்டு அனைத்து ஆவணங்களும் உள்ளன இவர்களுக்கு மாற்று இடம் தராமலேயே துறை சார்ந்த அதிகாரிகள் இடத்தை காலி செய்ய சொல்லி நெருக்கடி கொடுப்பதாக கூறுகின்றனர் மேலும் அவர்கள் கூறுகையில் எங்களை திடீரென்று காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே? போவோம் எங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது? என்றார்கள். எனவே மாற்று இடம் தந்து வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக