விதிமீறிய 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

விதிமீறிய 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.

அஞ்சுகிராமம் பால்குளம் பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர் பொருத்திய வாகனங்கள் ஓட்டிய 50 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர். அருண், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், மற்றும் போக்குவரத்து காவலர்கள்
அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் வாகன தணிக்கையின் போது ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், 

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய மற்றும் அதிவேகமாக ஆபத்தான முறையில் 
தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 50 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போக்குவரத்து விதிமீறல்கள் உள்ள வாகனங்கள் சரிசெய்யபட்டு வாகன ஓட்டிகளுக்கு தக்க அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad