திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்திருந்தார். அந்த மனுவில்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்ரீகொண்டத்துக்காளியம்மன் கோவில் 2025 ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுத்து குண்டம் திருவிழாவின் போதும் பக்தர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.5.லட்சம் இன்சூரன்ஸ் செய்து எவ்வித குளறுபடிகள் இன்றி அமைதியான முறையில் பாதுகாப்புடன் குண்டம் திருவிழா நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்திலுள்ள பெருமாநல்லூரில் கடந்த 2023 ம் ஆண்டு கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், குளறுபடிகள் காரணமாக பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. குண்டம் இறங்கிய பக்தர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர். நடப்பாண்டு, குண்டம் திருவிழா வருகின்ற 02-04-2025 ம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி 12-04-2025 ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது அதில் வருகின்ற 08-04-2025 ம் தேதி குண்டம் தேர் திருவிழா நடைபெற உள்ளது குண்டம் இறங்கும் பக்தர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க, 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு செய்யப்படவேண்டும். மேலும் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையிலுள்ள கணக்கம்பாளையம் பிரிவு நால்ரோடு முதல் பெருமாநல்லூர் வரை உள்ள பிராதன சாலையில் போதுமான அளவில் லைட் வெளிச்சம் இல்லாத காரணமாக கடந்த ஆண்டு மஞ்சள் கிணறு இறங்க இரவில் செல்லும் பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் வெளிச்சம் இல்லாத பிராதன சாலையில் சிலர் மது போதையில் நின்றும் குறுக்கு மறக்க அங்கும் இங்கும் ஓடி பக்தர்களை அச்சுறுத்தினர் மேலும் மதுபோதையில் அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனங்களில் வந்து ரகளையில் தொடர்ச்சியாக ஈடுபடக்கூடிய அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு திருப்பூர் பெருமாநல்லூர் சாலையிலுள்ள கணக்கம்பாளையம் பிரிவு நால்ரோடு முதல் பெருமாநல்லூர் வரை உள்ள பிராதன சாலையில் போதுமான அளவில் லைட் அமைக்கவும் அதிகளவிலான காவல்துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு பக்தர்களுக்காக பாதுகாப்பை உறுதிசெய்து குண்டம் தேர் திருவிழாவிற்கு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுத்து மாவட்ட நிர்வாகமும், இந்து அறநிலைய துறையும், காவல் துறையும் சிறப்பு கவனம் செலுத்தி எவ்வித குளறுபடிகள் இன்றி அமைதியான முறையில் பாதுக்காப்புடன் பொது மக்கள் குண்டம் தேர் திருவிழாவில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக