திருநெல்வேலியில் மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் இரண்டாவது "சவேரியன் " சர்வதேச சதுரங்க போட்டி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சவேரியார் கலைமணிகளின் அதிபர் எஸ். இன்னாசி முத்து கல்லூரியின் செயலாளர் டாக்டர் ஜி புஷ்பராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் காட்வின் ரூபஸ் போட்டியை தொடங்கி வைத்தார் சதுரங்கப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் உடற்கல்வித்துறை பேராசிரியருமான டாக்டர் எஸ். அதிசயராஜ் வரவேற்றார். இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மைசூர், மும்பை , ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஒரு வீரரும் என மொத்தம் 544 ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி நாள்தோறும் 7 மணி நேரம் நடைபெற்றது தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா தூய சவேரியார் தன்னாட்சிகள் கல்லூரியின் லொயோலா அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் டாக்டர் ஜி புஷ்பராஜ் தலைமை தாங்கினார் கல்லூரியின் முதல்வர் டாக்டர். காட்டுவின் ரூபன் விளையாட்டுத்துறை இயக்குனர் அருட்தந்தை பெர்க்மான்ஸ். மதுரை மாவட்ட சதுரங்க சர்க்கிளின் செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருநெல்வேலி சரக வருமான வரித்துறை இணை ஆணையாளர் எஸ். மனோஜ் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் மொத்தம் 87 வீரர்களுக்கு ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பரிசுகளும் 228 சதுரங்க வீரர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன
முதலிடத்தை பெற்ற சென்னையைச் சேர்ந்த என். சுரேந்திரன் ரூபாய் 75 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வெற்றி கோப்பையும் இரண்டாம் பரிசாக ஆர். ஆர். லக்ஷ்மன் 50 ஆயிரம் ரூபாய் பரிசையும் வெற்றிக் கோப்பையையும் ராமநாதன் பாலசுப்பிரமணியன் மூன்றாம் பரிசாக 22 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெற்றிக்கோப்பையும் பெற்றார் சதுரங்கப் போட்டியில் ஒருங்கிணைப்பாளரும் உடற்கல்வித்துறை பேராசிரியருமான டாக்டர் எஸ். அதிசயராஜ் வரவேற்றார் முடிவில் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியும் உடற்கல்வித்துறை இயக்குனரும் சதுரங்க போட்டியின் அமைப்புச் செயலாளர் டாக்டர் வி. குமார் நன்றி கூறினார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி நிர்வாகத்துடன் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் டாக்டர் வி. குமார் டாக்டர் எஸ். அதிசயராஜ் டாக்டர் சி. செல்வராஜ் டாக்டர் பி. தங்கராஜ் பி. அருணாச்சல வடிவு ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்ட சதுரங்க விளையாட்டு கழகத்தின் தலைவர் எம். ராமச்சந்திரன் செயலாளர் ஏ. முருகானந்த் பொருளாளர் ஆர். தாஜுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக