திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, ரூபாய் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை - கடந்த ஆண்டை விட விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, ரூபாய் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை - கடந்த ஆண்டை விட விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை

 

IMG_20250328_154152_144

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி,  ரூபாய் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை - கடந்த ஆண்டை விட விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை.



மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி , இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூபாய் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில், இஸ்லாமியரின் முக்கிய திருநாளாக கருதக்கூடிய இந்த விழாவிற்காக இஸ்லாமியர்கள் அசைவ உணவு படைத்து,  ஏழை மக்களுக்கு பகிர்ந்து உண்டு மகிழ்வர்.
              இந்த நிலையில், அசைவ உணவிற்காக ஆடுகளை வாங்கி தங்களது இல்லத்திலேயே அதனை பரிசுத்தமாக சமைத்து , ரம்ஜான் தினத்தன்று ஜாதி , இன பாகுபாடு இன்றி சமைத்த பிரியாணியை கொடுத்த மகிழ்வது வழக்கம்.
           அது போல் , இந்த ஆண்டு ரம்ஜான் தினத்திற்காக திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூபாய் 5000/- முதல் ரூ. 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மதுரை , தேனி , விருதுநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் இச்சந்தையில் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு விட, இந்த ஆண்டு ஒவ்வொரு ஆடும் ரூபாய் ஆயிரம் முதல் 3000/- வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளதாகவும், கடந்தாண்டு ரூபாய் ஆறு கோடிக்கு மேல் விற்பனையான நிலையில், தற்போது நான்கு கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad