திருப்பத்தூர் , மார்ச் 17 -
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் சீட் பைனான்ஸ் நடத்திபவர் யுகேஷ் பாபு தந்தை பெயர் மணிகண்டன் உங்களிடம் பல்வேறு நபர்கள் சீட்டு பணம் கட்டி உள்ளனர் இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சீட்டு பணம் ஏமாந்த ராதாகிருஷ்ணன் தந்தை பெயர் கோவிந்தசாமி இவர் காரப்பட்டு ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பத்தூரில் யுகேஷ் பாபிடம் சீட்டு கட்டி வந்தார் ராதாகிருஷ்ணன் யுகேஷ் பாபுவின் மனைவி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக யுகேஷ் பாபின் மனைவி மேனகா பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் யுகேஷ் பாபு இடம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர் இந்த நிலையில் கட்டிய சீட்டு பணம் ஏமாற்றி சுமார் 4 கோடி ரூபாய் அளவில் ஏமாற்றி உள்ளார்
சீட்டு கட்டி ஏமாந்த ராதாகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவரோடு சேர்ந்த மூன்று நபர்களும் எங்களது பணமும் அவரிடம் பறிகொடுத்து உள்ளோம் எனவும் எங்களது பணமும் மீட்டு தர வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். யுகேஷ்பாபு சீட்டு நடத்துவதற்கு ஒவ்வொரு இடமும் சுமார் 5 லட்சம் விதம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது இதனால் பணத்தை ஏமாந்த நபர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்இடம் மனுஅளித்தனர்
பின்பு ராதாகிருஷ்ணன் கூறுவது நான் எடப்பாடியில் பாணி பூரி கடை நடத்தி வருகிறேன் திருப்பத்தூர் பகுதியில் உள்ள யுதேஷ் பாபு இடம் 5. லட்ச ரூபாய் சீட்டு கட்டி வந்தேன் 16 தவணை கட்டியுள்ளேன் எனக்கு சீட்டு பணம் வேணும் என கேட்ட பொழுது உனக்கு சீட்டு பணம் கண்டிப்பாக தருகிறேன் என வாக்குறுதி அளித்த யுகேஷ் பாபு பின்பு சீட்டு பணம் வேண்டும் என கால் செய்த பொழுது போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது இதனால் ராதாகிருஷ்ணன் பலமுறை யுகேஷ் பாபு க்கு கால் செய்து உள்ளார் கால் செய்யும்போது எல்லாம் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது இதனை கண்ட பணம் கட்டி ஏமாந்த ராதாகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக