ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து செல்போன் மூலம் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது -3 லிட்டர் சாராயம் பறிமுதல்- பரதராமி போலீசார் விசாரணை!
குடியாத்தம் , மார்ச் 31 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச் சாராயத் தை கடத்தி வந்து தமிழக எல்லை பகுதி யான பரதராமி பகுதியில் செல்போன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக வந்த ரகசியதகவலின் அடிப்படையில் வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தர வின்பேரில் பரதராமி போலீசார் தமிழக ஆந்திர எல்லை பகுதியான தசராபள்ளி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 46) சுதாகர் (வயது 26 ) என்பதும் ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து பரதராமி மற்றும் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது, அதைத் தொடர்ந்து விஜயகுமார் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை கைது செய்த பரதராமி போலீசார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக