நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை :ஒரே நாளில் 35 சென்டிமீட்டர் மழைப்பொழிவு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை :ஒரே நாளில் 35 சென்டிமீட்டர் மழைப்பொழிவு.

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை :
ஒரே நாளில் 35 சென்டிமீட்டர் மழைப்பொழிவு:

கோடை காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தில் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது:மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையினால் குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது:

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக பட்சமாக ஊத்து பகுதியில் 36 மில்லிமீட்டர் பாளையங்கோட்டையில் 35 மில்லிமீட்டர் சேரன் மகாதேவியில் 32 mm நாலு முக்கு பகுதியில் 28 மில்லிமீட்டர் கண்ணடியன் அணைக்கட்டில் 27 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 25 மில்லி மீட்டரும் மாஞ்சோலையில் 21 மில்லி மீட்டர் திருநெல்வேலியில் 17 மில்லி மீட்டர் பாபநாசத்தில் 24 மில்லி மீட்டரும் களக்காட்டில் 24 மில்லி மீட்டரும் என பரவலாக மழை பொழிவு பதிவாகியுள்ளது.

சேர்வலாறு அணை தொடர்ந்து 100 அடியை தாண்டி 104.53 அடியாகவும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 92.10 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 86.34 அடியாகவும் உள்ளது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 530 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணைக்கு சுமார் 340 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது:

அணையில் இருந்து பாசனத்திற்காக 50 கன அடி தண்ணீர் பாபநாசத்தில் இருந்தும் 425 கன அடி தண்ணீர் மணிமுத்தாறிலிருந்தும் திறக்கப்படுகிறது.

நெல்லை தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad