தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் 31வது பன்னாட்டு கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் ஆகிய இணைந்து நடத்தும் 31வது பன்னாட்டுக் கருத்தரங்கம் வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் முனைவர்.சி. அமுதா, மரு. முனைவர்,பெ. பாரதஜோதி, ஆகியோர் தலைமை தாங்கினார்.கும்பகோணம் மருதம் மலை இலக்கிய மன்றம் பேராசிரியர் செ.கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, வளர்தமிழ்ப்புல முதன்மையர் இரா.குறிஞ்சி வேந்தன், சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் முனைவர் கி.மணிவாசகம், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார். கர்த்தரங்க ஒருங்கிணைப்பாளர், அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை, பேராசிரியர் முனைவர் சி.தியாகராஜன் நோக்கவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சிறப்புநிலைப் பேராசிரியர் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் " தமிழில் அறிவியலும் தொழில்நுட்பம்" என்ற , நூலை வெளியிட்டார். தொடர்ந்து சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் க அன்பழகன் நூலை. பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும்,அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் இரா .இந்து வரவேற்றார். நிறைவில் முனைவர் பட்ட ஆய்வாளர் ச.கோவிந்தராஜ் நன்றி கூறினார்..
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அனைத்து புலத்தலைவர்கள், துறைத் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மற்றும் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக