30 ஆயிரம் மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மீளாய்வுக்கூட்டம்!
வேலூர் , மார்ச் 28 -
வேலூர் மாவட்டத்தில்உள்ள அரசுப்பள்ளி களில் அறிவியல் கணிதம் பாடங்களை சிறப்பாக நடத்துவதற்காக வானவில் மன்றம் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப் பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது மூன்றாவது ஆண்டு இந்த கல்வி ஆண்டில் 2024-25ல் ஜுன் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வேலூர் மாவட்டத்தில் 285 மேல்நிலை, உயர்நிலை நடுநிலை பள்ளிகளில் கல்வி பயிலும் 29 ஆயிரத்து 789 மாணவ மாணவிகளுக்கு மாவட்டத்தில் 15 கருத்தாளர்களைக் கொண்டு கணிதம் அறிவியல் பாடங்களில் பயிற்சி அளிக்கப்ட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டங்களும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் மார்ச் மாத வேலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் மீளாய்வுக் கூட்டம் 28.03.2025 காலை 10 மணியளவில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ் வரபிள்ளை அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டசெயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வழங்கி வாழ்த்தி பேசினார். மாவட்ட உதவித் திட்ட அலுவலரிடமும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் அவர்களிடமும் கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக் கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன், அறிவியல் பரிசோதனைகளையும் கணித செயல்பாட்டையும் செய்து காட்டி விளக்கினர். உபகரணங்கள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது. 15 கருத்தாளர் களும் பயிற்சியில் பங்கு பெற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பே.அமுதா, கருத்தாளர் களுக்கு அறிவியல் வெயீட்டு புத்தங்களை வழங்கி பாராட்டி பேசினார்.
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன்,பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி செயற்குழு உறுப்பினர்ஆர்.வேல்முருகன் சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.வேலூர் மாவட்டத்தில் 285 மேல்நிலை, உயர்நிலை நடுநிலை பள்ளிகளில் 29 ஆயிரத்து 789 மாணவ மாணவிகளுக்கு மாவட்டத்தில் 15 கருத்தாளர்களைக் கொண்டு கணிதம் அறிவியல் பாடங்களில் செய்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக