3ஆம் ஆண்டு புத்தக திருவிழா அரசுப்பள்ளியின் நூலகத்திற்கு தலைமையாசிரியர் ரூபாய் 6500 மதிப்பிலான நூல்கள் அன்பளிப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

3ஆம் ஆண்டு புத்தக திருவிழா அரசுப்பள்ளியின் நூலகத்திற்கு தலைமையாசிரியர் ரூபாய் 6500 மதிப்பிலான நூல்கள் அன்பளிப்பு!

 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா அரசுப்பள்ளியின் நூலகத்திற்கு தலைமையாசிரியர்  ரூபாய் 6500 மதிப்பிலான நூல்கள் அன்பளிப்பு!

வேலூர் , மார்ச் 29 -

வேலூர் மாவட்ட 3ஆம் ஆண்டு புத்தக திருவிழாவின் 7ஆம் நாளான இன்று அணைக்கட்டு வட்டம் குண்டுராணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்
தலைமையாசிரியர்ஆஜோசப்அன்னையா ரூபாய் 6500 மதிப்பிலான புத்தகங்களை வாங்கி வேலூர் வட்டம் கீழ்மொனவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி னார் .  அவருக்கு இன்று நடைபெற்ற சிந்தனை அரங்கில் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் பழனி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவைர் பே.அமுதா, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஓய்வுபெற்ற கருவூல அலுவலர் முதது.சிலுப்பன், எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா அழகிய பெரியவன், ஊராட்சிகள் உதவி இயக்குநர்க.திருமால் ஆகியோர் உடனிருந்தனர்.  முன்னதாக நடைபெற்ற சிந்தனை அரங்கத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.  பன்பாட்டை உணர்த்தும் பாமரனின் இலக்கியம் என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற கருவூல அலுவலர் முத்து சிலுப்பன் ஆடல் பாடலுடன் இசை கருவிகளுடன் உரையாற்றினார்.  தொடர்ந்து உரை எழுத்தும் திரை எழுத்தும் என்ற தலைப்பில் திரை வசனகர்த்தா அழகிய பெரியவன் உரையாற்றினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மு.பிரபு, செயற்குழு உறுப்பினர்கள் சா.குமரன், பெ.இராமு, பட்டதாரி ஆசிரியர் தியாகராஜன், பிரசாந், அந்திக்காட்டு பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad