திண்டுக்கல்லில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது!
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று 21:3:25 தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர், அப்போது குமரன் திருநகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த கிழக்கு YMR-பட்டியை சேர்ந்த முருகேஸ்வரன் மகன் விக்னேஸ்வரன்(29), குமரன் திருநகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் தனசேகர்(29) ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சிசெய்தனர், மேலும் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர், மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக