கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த 5 ம் தேதி சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் 2 ம் வெள்ளிக்கிழமையான இன்று திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது .
திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமை வகித்து திருப்பலியை நடத்தினார். இதில் இயேசுவின் சிலுவைப்பாடுகள் குறித்து 14 ஸ்தலங்களில் அதனை நினைவு கூறும் வகையில் கைகளில் சிலுவையைப் பிடித்து சிறப்பு வழிபாடு செய்தனர். புனித அமலோற்ப மாதா சபையினர் சிலுவைப் பாதையை வழி நடத்தினர்.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி, திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக