தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.3.2025) சட்டமன்றப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்துள்ளார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.3.2025) சட்டமன்றப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.3.2025) சட்டமன்றப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்துள்ளார்.

அதன் படி
இதே மாமன்றத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23.1.1968 அன்று இருமொழிக் கொள்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

1. மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது.

2. மத்திய அரசின் திட்டத்தை ஏற்க மறுக்கும் வகையிலும், மாணவர் எண்ணத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே செயல்பாட்டில் இருக்கும்.

இது தமிழ்நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த மாபெரும் கொடை! இது கொள்கை மட்டுமல்ல; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டம்!

தாய் நிலத்துக்கு தமிழும் - உலகத் தொடர்புக்கு ஆங்கிலமும் என்று அண்ணா வடித்த சட்டம் அது. தமிழிலும் ஆங்கிலத்திலும் கரைகண்ட அவர் வடித்துக் கொடுத்தசட்டம் அது. இந்த இருமொழிக் கொள்கைதான் அரைநூற்றாண்டு காலமாக நம் தமிழ்நாட்டை வளர்த்து வந்துள்ளது.

உலகளாவிய பரப்பில் நமது தமிழ் மக்கள் வாழவும், ஆளுமை செலுத்தவும், உயர்த்தவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழிவகுத்த கொள்கை இந்த இருமொழிக் கொள்கைதான். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள் நாம்.

யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம். 

மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் இப்போது உணர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

இன்னொரு மொழியைத் திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை சிக்கெனப் பிடிக்கிறோம்.

இந்தி மொழித் திணிப்பு என்பது, ஒரு மொழித் திணிப்பு மட்டுமல்ல, பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால்தான் இதில் உறுதியாக இருக்கிறோம், இருப்போம்!

இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் - மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அறிவித்து இந்தளவில் என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கிறேன். என முதலமைச்சர் சற்மன்ற கூட்ட பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad