காந்திநகர் துளிர் பள்ளியில் 22ஆம் ஆண்டு கலை விழா துணை மேயர், மண்டல தலைவர் பரிசுகள் வழங்கி பாராட்டு!
காட்பாடி , மார்ச் 23 -
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 22வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் வி.பழனி வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை த.கனகா, ஆண்டறிகை சமர்த்து பேசினார்.
பரிசு சான்றிதழ் வழங்கி சிறப்புரை
வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் ப.ரமேஷ்பாபு திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பி.சுமதி ஆகியோர் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் ஆர்.சீனிவாசன் அர்வகளுக்கும் வேலூர் ரோட்டரி மற்றும் மகளிர் மன்றத்தின் சார்பில் சாதனை நாயகி விருது பெற்ற அறங்காவலர் கே.குணசுந்தரி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனர்.
வாழ்த்துரை அரசு வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், வேலூர் மாநகராட் சியின் மாமன்ற உறுப்பினர் சாமுண்டீஸ்வரி குணாளன், பி.சிவசங்கரி பரமசிவம், பகுதி செயலாளர் என்.பரசிவம், மக்கள் சேவை சங்க துணை செயலாளர் ப.குணாளன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பே.அமுதா, வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், காட்பாடி கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு மக்கள் நலச்சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன், ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர் மு.சுவாமிநாதன், காங்கேயநல்லூர் விஸ்வ வித்யாலயா பள்ளியின் செயலாளர் செந்தில்வேல், சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் பள்ளி மாணவர்களின் மாறுவேட போட்டி, இசை, நடனம், நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றது. பள்ளி ஆசிரியைகள் சே.சித்ரா, சு.மலர்கொடி, வெ.பாரதி, தணிகைசெல்வம், கோரந்தாங்கல் உதவி அஞ்சலக அலுவலர் வெ.கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் உதவி தலைமையாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக