தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வீரபாண்டியபட்டிணம் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று (28.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:-
2024-2025 ஆம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று 28.03.2025 முதல் 15.04.2025 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 107 தேர்வு மையங்களில் 10668 மாணவர்கள், 11237 மாணவிகள் என மொத்தம் 21905 தேர்வர்கள் மற்றும் 359 தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
இன்று (28.03.2025) நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வில் 21434 (97.8 சதவீதம்) மாணவ / மாணவிகள் தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 107 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 1573 அறைக் கண்காணிப்பாளர்கள், 193 நிலையான படையினர், 263 சொல்வதை எழுதுபவர், 22 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 214 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டமான தேர்வறைகள், தூய்மையான குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தரைத்தளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வெழுதவும் சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற்றது.
மாணவர்கள் தேர்வு சார்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அச்சமின்றி தேர்வெழுத ஆலோசனைகள் பெறவும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக