வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.21/2025 u/s 420 IPC and 66D of IT (Amendment) Act 2008
வேலூர் , மார்ச் 10 -
வேலூர் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய தனியார் துறையில் பணிபுரியும் ஊழியருக்கு Part Time Job -ல் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணிலிருந்து Message வந்துள்ளது. அதனை நம்பி அவர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் அனுப்பும் Google லிங்கில் வரும் Hotel/ Restaurant-களுக்கு Ratings செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதனை நம்பி மனுதாரரும் அந்த Google லிங்கில் கொடுத்த Restaurant-களுக்கு Ratings செய்து சிறிய தொகையை கமிஷனாக பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து Telegram மூலமாக தொடர்புகொண்டு அவர்கள் கொடுத்த போலியான trading website-ல் வங்கி மற்றும் தனிநபர் விவரங்களை பதியச்சொன்னதன் பேரில் மனுதாரரும் பதிவு செய்து போலியான trading கணக்கைத் தொடர்ந்து பல்வேறு தவணைகளில் அவர்கள் அனுப்பிய வங்கிக் கணக்குகளுக்கும், UPI ID-களுக்கும் மொத்தமாக ரூ.11,58,818/- பணத்தை அந்த போலியான trading website-ல் முதலீடு செய்துள்ளார். பின்னர் அந்த போலியான website-ல் கமிஷனுடன் காட்டிய பணத்தை எடுக்க முயன்ற போது, இன்னும் அதிக பணத்தை முதலீடு செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று Notification காண்பித்துள்ளது. பின்னர் சந்தேகமடைந்து விசாரித்தபோது தான் இது போன்று trading website-ல் பணத்தை முதலீடு செய்து பணம் பறிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. உடனே, இது குறித்து சைபர் கிரைம் புகார் அளிக்கும் இணையதளமான www.cybercrime.gov.in புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மதிவாணன், உத்தரவின்படி வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலிசாரால், சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.21/2025-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுபோன்று பொதுமக்கள் யாரும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே வேலை (Share Market Investment, Online Part time job, Work From Home) சம்பந்தமாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் சார்பாக இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக