திமுக தலைவரும் தமிழ்நாட்டு மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி,
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 35-வது வார்டு, வாலிபாளையம் சடையப்பன் கோவில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம் எல் ஏ, அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில், கோவில் முன்பு உயர்மட்ட நிழற்கூரை அமைக்கும் பணியினை சிறப்பாக செய்து முடித்து இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த இனிய நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக