திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், காங்கேயம் கல்விக் குழுமத்தில் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி, காங்கேயம் வணிகவியல் கல்லூரி, காங்கேயம் மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்விக் குழுமத்தின் எலன்ட்ரா 2025 என்னும் விழா 25,26 ம்தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காங்கேயம் கல்விக் குழுமங்களின் தலைவா்,
என்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சி.கே. வெங்கடாசலம், நிறுவனர் ஆனந்த வடிவேல்,
பொருளாளா் பொருளாளர் சி.கே.பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கேயம் கல்விக் குழுமங்களின் தலைமை நிர்வாக அலுவலர் முனைவா் ஆர்.வி.மகேந்திர கௌடா, பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவா் எஸ். ராம்குமார்,காங்கேயம் வணிகவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் ஜி. சுரேஷ், காங்கேயம் மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவா் எஸ்.ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனா்.
எலன்ட்ரா என்னும் நிகழ்வானது மாணவா்களின் அறிவு மற்றும் அவர்களது திறமையை வளர்க்கும் வகையில் நடத்தப்படுகின்ற நிகழ்வாகும்.மாணவா்களின் திறமையை வளா்க்கும் விதமாக பலவிதமான போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. மற்ற கல்லூரி மாணவா்களும் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் இவ்விழாவானது அமைந்தது.
25-ம் தேதி தொழில்நுட்பம் சார்ந்து மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள் நடைபெற்றன.
தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தல், பொது அறிவு, கணினி உதவி வடிவமைப்பு (CAD), போன்ற போட்டிகள் நடைபெற்றன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பங்கேற்ற மாணவா்களுக்கு மின்னனு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் மாணவா்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் போட்டிகள் நடைபெற்றன. இசைக் கச்சேரி, நடனம், குழுநடனம், இசைக் கருவி வாசித்தல், புகைப்படமெடுத்தல், குறும்படம் போன்ற போட்டிகள் நடைபெற்றன இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னா் மாலை 4 மணி அளவில் காங்கேயம் கல்விக் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அதி்ல் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் பங்கு பெற்றனர்.
கி.கி விஜய் – வீ.ஜே (விஜய் தொலைக்காட்சி) மற்றும் ஆஷிக் - வீ.ஜே ஆகியோர் அறிமுகத்துடன் நிகழ்ச்சியானது தொடங்கியது. அவா்களைத் தொடா்ந்து பாடகி பூஜா வெங்கட் (சூப்பர் சிங்கர் இசைக் கச்சேரியும், திரைப்பட நடிகை காஷ்மீரா (அன்பறிவு, சிவப்பு மஞ்சள் பச்சை படங்களின் நாயகு) அறிமுகம் மாணவா்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது.
பின்னர் செம்மீன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மாணவா்களுக்கு புத்துணா்ச்சி ஊட்டும் வகையில் அமைந்தது. முடிவில் டிஜே (DJ) பாடல்களின் மூலம் மாணவா்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதல்நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.
அதைத் தொடர்ந்து இரண்டாம் நாளான 26-ம்தேதி காலை 9 மணி முதல் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்து மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள் நடைபெற்றன.
மாணவா்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் நோக்கில் விளையாட்டு நிகழ்ச்சிகளும், மாணவா்களை சிந்திக்க வைக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதன. அதைத் தொடா்ந்து தமிழ் பாரம்பரிய நடன நிகழ்வும் நடத்தப்பட்டது. பல கல்லூரி மாணவா்களும் கலந்து கொணடு மகிழ்ந்தனர்.
பின்னா் மாலை 4 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. நிகழ்ச்சியில் பிரபல திரை நட்சத்திரங்கள் பலர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆஷிக் வீஜே பங்கு பெற்றார். சூப்பா் சிங்கா் அஜய் கிருஷ்ணாவின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னா் கோபி, சுதாகா் ஆகியோர் கலந்துகொண்டு மாணவா்களை உற்சாகப்படுத்தினா். பின்னா் நடிகர் ஹரிஷ் கல்யாண் வருகையால் பார்வையாளர்கள் மனம் மகிழ்ந்தனர். அதை தொடர்ந்து திரைப்பட நடிகையும், பின்னனிப் பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசை கச்சேரி மாணவா்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதைக் கவரும் வகையில் அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக