எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின், தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025-க்கான மண்டல அளவிலான போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின், தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025-க்கான மண்டல அளவிலான போட்டி.

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின், தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் 
சொல் தமிழா சொல் 2025-க்கான மண்டல அளவிலான போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது

நெல்லை, மார்ச் 9: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025 எனும் கல்லூரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி, திருநெல்வேலி சதக்த்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்றது.  

தமிழ்ப்பேராயம் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவன வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ்ப் படிப்பு, வள்ளலார் சான்றிதழ்ப் படிப்பு முதலானவற்றோடு பல இலட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு, தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் எனப் பல்வேறு சிறந்த பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி மண்டலத்தை உள்ளடக்கிய, கன்னியாகுமாரி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் பங்கேற்று, தாமிரபரணி ஆறு, வ உ சி, பாரதியார் என கொடுக்கப்பட் ஆறு தலைப்புகளில் உரையாற்றினர். 

இதற்குமுன் இப்போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. 

இப்போட்டி குறித்து, எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர். கரு. நாகராசன் பேசுகையில், இப்போட்டியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பயில்வோர் என 18 முதல் 25 வயது வரையுள்ள மாணவ - மாணவியர்கள் பங்கேற்க முடியும்.  

மண்டல அளவிலான போட்டியில் முதல் பரிசு 1 லட்சம் ரூபாயும், இரண்டராம் பரிசு 75 ஆயிரம், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 4 பேர்களுக்கு தலா 20 ஆயிரம் வழங்கப்படும். இப்போடியில் முதல் நான்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.

மாநில அளவிலான போட்டிக்கு முதல் பரிசு ரூ.5 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.3 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.2 இலட்சமும் வழங்கப்படும். இப்போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக ரூ. 40 இலட்சம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad