மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒருகிணைந்த நீதிமன்றத்தின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வழக்கறிஞர் சங்க தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் திரு வி. செல்வராஜ் அவர்கள் சங்க தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் செயலாளராக வழக்கறிஞர் எம். கண்ணன், துணைத் தலைவராக வழக்கறிஞர் பி. மருது பாண்டியன், பொருளாளராக எம். கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளராக வழக்கறிஞர் வி. அனு சூர்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு மானாமதுரை வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக