2025 மற்றும்2026 வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு !
திருப்பத்தூர், மார்ச் 29 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான நிர்வா கிகள் தேர்வு இன்று நடைபெற்றது.
இதில் தேர்தல் அலுவலர்களாக ஜேக்கப் பூபதி ரமேஷ் மனோகரன் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் 315 வழக்கறிஞர் கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுத் தனர் இதில் தலைவராக சத்தியமூர்த்தி வழக்கறிஞரையும் துணைத் தலைவராக முருகேசன் என்பவரும் செயலாளராக ஞானமோகன் மற்றும் பொருளாளராக ராஜீவ் காந்தி ஆகியோரை தேர்வு செய்தனர். அப்போது திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பல்வேறு தீர்மானங்களை போடப்பட்டது அப்போது மாவட்ட நீதிமன்றம் தற்போது உள்ள நீதிமன்ற கட்டிடத்திலே இயங்கவேண்டும்
பெண் வழக்கறிஞர்களுக்கு தனி வழக்க றிஞர்கள் சங்கம் ஏற்ப்படுத்தி தரப்படும்
மேலும் ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர் களுக்கு தனித்தனியாக கழிவரையும் அமைத்து தரப்படும் என பல்வேறு தீர்மானங்களைநிறைவேற்றப்பட்டன.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக