தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படும் மஞ்சள்நீர்காயலில் உள்ள 20 மி.கா கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள தொழிற் கூடங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான 20MGD குடிநீர் திட்டத்தை நிறுவ தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அனுமதித்தது.
அதன்படி 20 MGD நீர் வழங்கல் திட்டம் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. முன்னோடி நீர் வழங்கல் 01.11.1973 அன்று செயல்படுத்தப்பட்டது மற்றும் வழக்கமான நீர் வழங்கல் 28.02.1975 முதல் இயக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு மதிப்புமிக்க திட்டமாகும். இது தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது.
முன்னதாக, இந்தத் திட்டத்தின் தலைமைப் பணியிடம் இருவப்பபுரம் அருகே அமைந்தது. இதில்
(1) மூல நீர் உட்செலுத்தலுக்கான ஒழுங்குமுறை RCC குழாய்
(2) மூல நீர் சம்ப் மற்றும் பம்ப் ஹவுஸ் (3) 80 HP டர்பைன் மூல நீர் பம்புசெட்களின் 4 எண்ணிக்கை (34100 lpm x 8.5 மீ Head)அடங்கியுள்ளன. இத்திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தண்ணீரைப் பெறும் வடக்கு பிரதான வாய்க்காலின் மேற்பரப்பு நீரெடுத்து நீரேற்றம் செய்யப்பட்டது. கோடை காலத்தில், வடக்கு பிரதான வாய்க்காலில் நீரோட்டம் இல்லாதபோது அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் குளத்தில் தண்ணீர் சேமிக்கப்பட்டு,
இத்திட்டத்திற்காக நீரேற்றம் செய்யப்பட்டது. திட்டத்தின் மொத்த வடிவமைக்கப்பட்ட கொள்ளளவு 20MGD மற்றும் வடிவமைக்கப்பட்ட நீரேற்ற காலம் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் ஆகும்.
தலைமைப் பணியிடத்திலுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படும் நீர், 34100 LPM x 8.5 மீ அளவுள்ள 80HP செங்குத்து Turbine பம்புசெட்கள் 2 மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு மஞ்சள் நீர்க்காயலில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு 3780 மீ நீளம் கொண்ட 1200 மிமீ PSC மூலம் வந்தடைகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து மூடிய குழாய் அமைப்பு மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீரை கொண்டு வரப்படுகிறது. மூடிய குழாய் திட்டம் ரூ.2800 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
20 MGD குடிநீர் திட்டத்திற்காக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் மேல்பகுதியில் உள்ள தாமிரபரணி நதியில் 10மீ விட்டமுள்ள நீர் உட்கொள்ளும் கிணறு நிறுவப்பட்டுள்ளது.
பின் அங்கிருந்து நீரேற்றம் செய்யப்பட்டு பேட்மாநகரம் அருகே உள்ள Ridge point-ல் உள்ள 20LL கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிற்கு 400HP செங்குத்து Turbine பம்ப்செட்டுகள் (31570 lpmx 43 மீ head) மற்றும் 1000 மிமீ PSC குழாய் 8035மீ மூலமாக நீரேற்றம் செய்யப்படுகிறது. சம்பிலிருந்து சேகரிக்கப்படும் நீர் ஈர்ப்பு விசையியக்கக் குழாய்கள் BWSC மற்றும் PSC மூலம் 13829மீ தொலைவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
மஞ்சள்நீர்க்காயலில் அமைந்துள்ள முழு அளவிலான சுத்திகரிப்பு அமைப்பு மூலம் மூல நீர் சுத்திகரிக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1200 மிமீ விட்டம் கொண்ட குடிநீர் குழாய் மற்றும் 31600 LPM 15 மீட்டர் உயரம் கொண்ட 135 HP செங்குத்து டர்பைன்(கெப்ளான்) பம்புசெட்டுகள் மூலம் பயனாளிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. பயனாளிகளின் தத்தமது வரையறைக்குள் நிறுவப்பட்டுள்ள வாட்டர் மீட்டர்கள் மூலம் குடிநீர் அளவீடு செய்யப்படுகிறது.
தற்போது பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் அவர்களின் தேவைக்கேற்ப 7.00 MGD வரை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக