கன்னியாகுமரி - குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது... 80 கிலோ குட்கா பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

கன்னியாகுமரி - குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது... 80 கிலோ குட்கா பறிமுதல்.

குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது... 80 கிலோ குட்கா பறிமுதல்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் கேரளா மாநிலம், பாறசாலை, இஞ்சிவிளை பகுதியை சேர்ந்த ரஷீத் என்பவரின் மகன் சாதிக் அலி(44) மற்றும் களியக்காவிளை, மேக்கோடு பகுதியில் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகன் சிவக்குமார் (48) ஆகியோரிடமிருந்து 80 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்காவையும், 

குட்கா விற்பனைக்காக பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad