தூக்குத்துடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி, சந்தோஷ் உடன் பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் சிறுமியை அவரது பாட்டி வீட்டுக்கு, பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 23-ம்தேதி அங்கு வந்த 2 இளைஞர்கள் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்கு போராடிய சிறுமி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அவரை கொலை செய்ய முயன்றது பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் சந்தோஷ், முத்தையா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சேதுபதி ராஜா, ஏரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக