உளுந்தூர்பேட்டை அருகே முறை தவறிய காதலால் 16 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்ற 20 வயது இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது முறை தவறிய காதல் என்பது தெரிய வந்ததால் சிறுமியின் பெற்றோர் இளைஞர் வீட்டுக்கு சென்று கூறியதால் இரு தரப்பினரும் இளைஞரை கண்டித்துள்ளனர் இந்த நிலையில் அந்த சிறுமியை அந்த இளைஞர் தொடர்ந்து தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார் இந்த நிலையில் அந்த இளைஞர் மீது அந்த சிறுமி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் அதன் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி, சஞ்சீவி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து அந்த இளைஞரை நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்...
உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் பாலியல் அத்துமிரலில் ஈடுபட்டு வரும் வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக