ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டிலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்களும், அணை மீன்களும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த வாரம் இரண்டு மார்க்கெட்டிலும் சேர்த்து 15 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த வாரம் ஒரு சில மீன்களின் விலை உயர்ந்தும், ஒரு சில மீன்களின் விலை குறைந்தும் விற்கப்பட்டன. கடந்த வாரம் ஒரு கிலோ வெள்ளை வாவல்
1, 200க்கு விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ வெள்ளை வாவல் ரூ. 1, 200-க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் கருப்பு வாவல் ஒரு கிலோ ரூ. 850 க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.100 அதிகரித்து ரூ.950 க்கு விற்பனையானது.
இதே போல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-
வஞ்சரம் - 1000, சீலா - 600, கடல் அவுரி 700, முரல் -400, கடல் பாறை - 550, சங்கரா - 400, விளாமின் - 550, டுயானா 650, கிளி மீன் - 700, மயில் மீன் - 800, ப்ளூ நண்டு - 700, பெரிய இறால் - 700, சின்ன இறால் - 550, தேங்காய் பாறை 550, திருக்கை - 400, கொடுவா - 900, ரெட் சால் - 800, சால்மோன் - 950, மத்தி 250, அயிலை - 300.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக