சாலைகிராமத்தில் ரூபாய் 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஒன்றியம் சாலைகிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் 10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றான சாலைகிராமத்தில் புதிய பேருந்து நிலையமானது "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில்" தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், ரூபாய் 1.36 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், திட்ட இயக்குனர் திருமதி வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் த. சேங்கைமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கட்ராமன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊராட்சிகளின் அனைத்து அணிகளை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் திமுக நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக