தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 131 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டாக்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 131 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டாக்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 131 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டாக்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் இன்று (23.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட கணினி பட்டாக்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கணினி பட்டாபெறாமல் இருந்த நிலையில் கடந்த 07.02.2025 அன்று டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 3500க்கும் மேற்பட்டோர் பட்டா கேட்டு விண்ணப்பத்திருந்தனர். 

அதில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் கணினியில் பதிவேற்றம்செய்து முதற்கட்டமான 151 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் 2ம் கட்டமாக கணினிபட்டா 131 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு கணினி பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டா வழங்குவது மூலம் தொகுதி மக்கள் மட்டுமின்றி நான், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்பட எல்லோரும் மன மகிழ்ச்சியாக இருக்கிறோம். 

காரணம் கிரைய பத்திரம் வைத்திருப்பவர்கள் உரிமை பட்டா கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு கணினி பட்டா வழங்கப்படுவதின் மூலம் இது தான் உங்கள் இடம் என்பதற்கு இது மிகப்பெரிய ஆதாரமாக அமையும். கூட்டு பட்டா பலர் வைத்திருப்பார்கள். 

தனிபட்டா வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இடத்தின் நிலையை வருவாய் துறையினர் ஆய்வு செய்து அதன் பிறகு அவர்களுக்கு கணினி பட்டா வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

அதில் நீர்வழித்தடங்களில் இருப்பவர்கள் நீங்கலாக மற்ற இடங்களை முறையாக ஆய்வு மேற்கொண்டு பட்டா வழங்குவதற்கு உரிய இடமா என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 41,442 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கணினி பட்டா வேண்டி விண்ணப்பிக்காதவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் பேசும்போது தெரிவித்ததாவது:- இந்த பட்டாக்களை எல்லாம் வழங்குவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்கள் மேற்கொண்ட முயற்சி தான் முதல் காரணம். இதே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தி மனு பெற்றுக்கொண்டதில் தற்போது 500 பேருக்கு கணினி பட்டாக்கள் தயாராகி உள்ளது. இதர விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பெறப்படும் மனுக்களுக்கு அதன்படியே வரிசையாக பட்டா வழங்கப்படும். 

இதில் கூட்டுப்பட்டா இருப்பது உங்களுக்கு ஓரு ஆவணம் தான். தனி பட்டாவாக வாங்கினால் உங்களுடைய இடங்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் தேவைப்படும். எனவே, கூட்டுப்பட்டா வைத்திருப்பவர்கள் தனிபட்டா பெற விண்ணப்பம் செய்யலாம். 

பத்திரம் மட்டுமே வைத்திருப்பது ஆவணம் என கருதிவிட முடியாது. அரசு பட்டா தான் உங்களுக்கு அங்கீகாரம். இதையெல்லாம் உணர்ந்து தான் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதாஜீவன் அவர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி எல்லோருக்கும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி இயக்குனர் நில அளவை சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் முரளி, உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad