குடியாத்தம் நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் ,மார்ச் 26 -
வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் நடைபெற்றது. நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, காடை G.P.மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் பொகலூர் D.பிரபாகரன், S.I.அன்வர் பாஷா, L.D.ஹேமந்த் குமார், மாலிப்பட்டு M.C.பாபு, V.ரித்திஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி N.ராமச்சந்திரன் அவர்களும், காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர். சதீஷ் சங்கர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப் பாளர்களுக்கு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் 9 பேருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
.நிகழ்ச்சியில் A.ரவிச்சந்திரன், மாயா பாஸ்கர், அமுதா கருணா, S.N.சுந்தரேசன், R.அட்சயா வினோத்குமார், G.தேவராஜ், பரிதா, இன்பரசன், நகர மன்ற உறுப்பினர் K.லாவண்யா குமரன், மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் வார்டு கழக பொறுப்பாளர்கள் நகர சார்பணி நிர்வாகி கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
25/03/2025 செவ்வாய்க்கிழமை மாலை 5மணி முதல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வார்டு மற்றும் பாக எண்கள் வார்டு எண்கள் 13, 14 ,15, 36 மொத்தம் 10 பாகங்கள்.இடம்: ஸ்ரீ வைஷ்ணவி மஹால் ஆர்.எஸ்.ரோடு, குடியாத்தம் வார்டு எண்கள் 3,4,5,10,11,12, 17 இடம்: M.S.திருமண மண்டபம்
பிச்சனூர், குடியாத்தம் . மொத்தம் 13 பாகங்கள்.வார்டு எண்கள் 25,26,27,28 *இடம் : சிவகாமசுந்தரி திருமண மண்டபம், ஜோதி உயர்நிலைப் பள்ளி அருகில், நெல்லூர் பேட்டை, மொத்தம் 11 பாகங்கள் வார்டு எண்கள் 29,30,31,32 33,34 இடம்: மேல்பட்டி ரோடு வார சந்தை S.N.சுந்தரேன் அலுவலகம் காமாட்சி அம்மன் பேட்டை குடியாத்தம் மொத்தம் 13 பாகங்கள் ஆகிய வார்டுகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக