ஆன்லைனில் பணத்தை இழந்த 12 நபர்களின் பணம் சுமார் ₹ 5,79,581/- மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 மார்ச், 2025

ஆன்லைனில் பணத்தை இழந்த 12 நபர்களின் பணம் சுமார் ₹ 5,79,581/- மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைப்பு!


வேலூர் , மார்ச் 16 -

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த துணிக்கடை நடத்திவரும் பெண் ஒருவர் Instagram- ல் வந்த விளம்பரத்தை பார்த்து மொத்தமாக துணிகளை ஆர்டர் செய்து ரூ.81,613/- பணத்தை அனுப்பி பின்னர் ஏமாற்றப்பட்டதாகவும், அனைகட் பகுதியை சேர்ந்த மேஸ்திரி வேலை செய்யும் நபரின் தங்கைக்கு கல்வி உதவி தொகை (Scholarship) வழங்குவதாக வந்த Call-யை நம்பி முன்பணமாக ரூ.32,999/- பணத்தை செலுத்தி ஏமாற்றப்பட்ட தாகவும், மேலும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த நகை கடை வியாபாரிக்கு வாட்ஸ்ஆப்பில் D Mart offer சம்பந்தமாக Link ஒன்று வந்ததாகவும் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டவுடன் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.61,598/- பணத்தை எடுத்து விட்டதாகவும் இது போன்று மேலும் இதே மாதிரியாக ஆட்டோ ஓட்டுனர், வழக்கறிஞர் போன்ற மேலும் பிற புகார்தாரர்களான 9 நபர்களின் புகார்களின் அடிப்படையிலும் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் எடுத்த உடனடி நடவடிக்கையின் மூலம் அவர்கள் இழந்த பணம் சுமார் ₹ 5,79,581/- மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இதற்கான மீட்பு ஒப்புகை ரசீதுகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மதிவாணன் பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.அண்ணாதுரை, காவல் ஆய்வாளர் M.ரஜனிகாந்த், காவல் உதவி ஆய்வாளர் A. சதீஷ்குமார், பெண் தலைமை காவலர் G. மாலதி ஆகியோர்கள் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad