ரூ 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

ரூ 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை!


குடியாத்தம் , மார்ச் 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராம நிர்வாக அலுவலராக கோபி என்கின்ற கோபிநாத் என்பவர் பணியாற்றி வருகிறார் இதனிடையே அதே பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பட்டா மாறுதலுக்காக வி ஏ ஓ கோபியிடம் அணுகியுள்ளார்,
இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக லஞ்ச பணமாக தனக்கு பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என கோபி நிஜாமூதீனிடம் கேட்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து நிஜாமுதீன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் இதனையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி இன்று வேப்பூர் கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் நீஜாமுதீன் பத்தாயிரம் ரூபாய் பணம் வழங்கினார்,அப்பொழுது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் கோபியை கையும் களவுமாக பிடித்தனர் மேலும் அவரிடம் இருந்து லஞ்சப் பணம் பத்தாயிரம் பறிமுதல் செய்து கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விவசாயிடம் பட்டா மாறுதலுக்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad