உலக மகளிர் தின விழா மற்றும் திராவிடத் தாய் மணியம்மையார் 106வது பிறந்தநாள் விழா!
குடியாத்தம் , மார்ச் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக மகளிர் தின விழா மற்றும் தொண்டறத் தாய் மணியம்மையார் 106வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைப் பெற்றது .விழாவிற்கு பள்ளி செயலர் ரம்யா கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார் பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் அவர்கள் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக கல்வி ஆலோசகர்கள் ஓய்வு பெற்ற மின்சாரத்துறை அலுவவர் அன்பரசன், பகுத்தறிவாளர் கழகம் மாநில அமைப்பாளர், ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்.திரு.தனபால் ஆகியோர் கலந்துக் கொண்டு பெண்கள் விடுதலை பெண்கள் பாதுகாப்பு பெண்கள் உழைப்பு தியாகம் குறித்தும் அன்னை மணியம் மையாரின் தொண்டறம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார் விழாவில் பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில் பெண்கள் முன்னேற்றம், சாதனை உலகில் பெண்களின் பங்கு என பலதரப்பட்ட தலைப்புகளில் ஆசிரியர்கள் உரை நிகழ்த்தினர். முதலாவதாக பள்ளியின் முதல்வர் ஆர்.மேகலா அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் இராஜகுமாரி விழாவினை ஒருங்கிணைத்தார்.
பள்ளியின் 9மற்றும் 10வகுப்பு மாணவர்கள் மகளிர் தின சிறப்பு கவிதை வாசிப்போடு நிகழ்வு நிறைவுற்றது.
விழாவில் கலந்து கொண்டு, உரை, கவிதை படைத்த ஆசிரியர்கள் 1 மாணவர்களுக்கு மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது
இறுதியாக பள்ளி ஆசிரியை ஆர்.அஸ்வினி அவர்கள் நன்றியுரை நல்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக