ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு
குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் சிறப்பு தொழுகை 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
குடியாத்தம் , மார்ச் 31 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தர்கேட் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகல மாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அவர்கள் இப்பண்டிகையை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். பின்னர் நோன்பு நாட்கள் முடிந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதைமுன்னிட்டு முஸ்லிம்கள்காலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை சித்தூர் ரோடு, முனாப் டிப்போ, (தாருல் உலூம் சயீதியா அரபிக் கல்லூரி வளாகத்தில் ஈத்கா மைதானத்தில் ) ரமலான் திறப்பு தொழுகை நடைபெற்றது மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர். அப்போது ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறுவர்களும் ஒருவருக் கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு இனிப்பு மற்றும் அசைவ உணவு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக