ராணிப்பேட்டை , மார்ச் 29 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4000 கோடியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு மு.க ஸ்டாலின் அவர்களின்ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர். காந்தி அவர்களின் மேற்பார்வையில், மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர். ஆர்.ஜி.வினோத் காந்தி அவர்கள் வழிகாட்டுதலின்படி, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4000 கோடியை தரமறுக்கும் பாசிச ஒன்றிய அரசை கண்டித்து நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பி்ல் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் கீழ்வீதி மற்றும் நாகவேடு கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். மங்கையர்க் கரசி சுப்பிரமணி, நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடே சன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய கழக பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், முன்னால் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். ராஜேஷ், கீழ்வீதி கிளை கழக செயலாளர். குமார், ஆஞ்சிநேயன், ஒன்றிய பிரதிநிதி. சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர். முருகேசன், ஒன்றிய இளைஞர் அணி. கந்தன், விஜி, நட்பு நவீன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி. மணிகண்டன் கருணாநிதி, ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக