காட்பாடி , மார்ச் 7 -
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேய நல்லூர் விஸ்வ வித்யாலயா பள்ளியின் 10 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெறற்றது. விழாவில் சிறப்பு விருந்ததினராக பங்கேற்று பேசிய காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் பெற்றோர்கள் செயலாற்ற வேண்டும் என்றார்.விழாவிற்குபள்ளியின் தாளாளர் ப.ரேவதி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி அறக்கட்டளையின் தலைவர் ப.சந்திரசேகரன் வரவேற்று பேசினார். பள்ளி நிர்வாக இயக்குநர் ப.செந்தில்வேல் தலைமையாசிரியை ந.பிரபா உதவித்தலைமையாசிரியை எஸ்.அகிலா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் .காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர். செ.நா.ஜனார்த்தனன், விஐடி பல்கலை கழக உதவி பேராசிரியர் என்.நளினி ஆகியோர் சிறப்பு விருந்ததினராக கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார்கள் தனியார் பள்ளிகள் சங்க மாவட்ட செயலாளர் ட்டி.வி.சிவபெருமான் வள்ளிமலை மழலையர் பள்ளியின் தாளார் ரமேஸ், காந்திநகர் துளிர் பள்ளி தலைமையாசிரியை த.கனகா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.விழாவில் பேசிய செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது.. ஒவ்வொரு பெறோரும் தங்கள் குழந்தை சிறப்பாக கல்வி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற தங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமெனில் அவர்களை ஊக்க படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.விஐடி உதவி பேராசிரியர் என்.நளினி பேசுகையில் நம் குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை கேட்ட வார்த்தைகளை தான் பேசுகின்றனர். எனவே நாம் வீட்டில் எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேசி பழக வேண்டும் என்றார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடை பெற்றது. விழாவில் ரேவதிபத்மநாபன், ஆசிரியைகள் கவிதா,லட்சமி பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர முடிவில் பள்ளி செயலாளர் ப.செந்தில்வேல் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக