ஒரே நாளில் சிறார்கள் ஓட்டி வந்த 05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

ஒரே நாளில் சிறார்கள் ஓட்டி வந்த 05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு.

ஒரே நாளில் சிறார்கள் ஓட்டி வந்த 05 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.பார்த்திபன் மேற்பார்வையில், பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர் அழகிய மண்டபம்,முளகுமூடு மற்றும் கோழிப்போர்விளை ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,18 வயது பூர்த்தி அடையாத 05 சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் 08 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக "JUVENILE DRIVING CASE" under section 199 A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை காலங்கள் வர உள்ள நிலையில், சிறார்கள் வாகனங்கள் இயக்காதவாறு பெற்றோர்கள் கவனமாக செயல்படுமாறு பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad