டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து; 20 ஆயிரம் லிட். டீசல் நாசம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து; 20 ஆயிரம் லிட். டீசல் நாசம்.

1002461236

வாணியம்பாடி அருகே டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி  விபத்துக்குள்ளானதில், லாரியின் டேங்க் உடைந்து  20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீண், சாலையில் மரத்தூள் கொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்த நெடுஞ்சாலைத்துறையினர்.


வாணியம்பாடி அடுத்த  செட்டியப்பனூர் பகுதியில் உள்ள  பெங்களூர் -  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, பெங்களூரில் இருந்து சென்னையிற்கு டீசல் ஏற்றிச்சென்ற லாரி, திடீரென  ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை  இழந்து   சாலையின் நடுவே உள்ள  தடுப்புச் சுவர் மீது மோதி  விபத்துக்குள்ளானதில், டீசல் டேங்க் உடைந்து  லாரியில் இருந்த  20 ஆயிரம்  லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது, இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி, கிராமிய காவல்துறையினர் மற்றும்  தீயணைப்புத்துறையினர், சாலை முழுவதும் தேங்கிய டீசலால்,   அசம்பாவிதம்  ஏற்படாமல் இருக்க சாலையில் தண்ணீரை பீச்சி அடித்தும், மரத்தூள்களை சாலை முழுவதும் தூவினர். மேலும் விபத்துகுள்ளான  லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்..


இந்நிலையில் இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையில் டீசல் ஏற்றிச்சென்ற லாரி, தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad