கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கலைத் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு கந்தசாமிபுரம் 17 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி இரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.
ஸ்ரீ சாரதா ஆசிரமம் நிர்வாகி யத்தீஸ்வரி சச்சிதானந்த பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாலதி ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் அய்யா மொட்டையன், நல்லாசிரியர் அருணா சூரியகுமார், நகர மன்ற உறுப்பினர் பூம்பொழில் தினேஷ்பாபு, தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் இயக்குனர் ஞான ப்ராணமாஜி வரவேற்புரையாற்றினார்.
பள்ளியின் முதல்வர் சந்திரா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு நிர்வாகிகள் ரமேஷ், அசோக் குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக