கந்துவட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் சிறையில் உள்ள ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளி(Rowdy History Sheet)ராஜன் @சந்தை ராஜன் குண்டர் சட்டத்தில் கைது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜன் @ சந்தை ராஜன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்.அழகுமீனா அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்கள். கந்துவட்டி கேட்டு மிரட்டுவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக