குடியாத்தம் , பிப் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்க வளாகத்தில் இன்றுகாலை இன்னர் வீல் கிளப் சார்பாக ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அயன் பாக்ஸ் மற்றும் சாலை ஓர வியாபாரிகளுக்கு குடைகள் மற்றும் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது
நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் கிளப் தலைவி ஆயிஷா ஜாவித். தலைமை தாங்கினார்
பொருளாளர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக
முன்னாள் நகர் மன்ற தலைவரும் 11 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் புவியரசி
35 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கன்னிகா பரமேஸ்வரி மற்றும் விஜய் பிரசாத் பூர்ணிமா ஜோதி பிரகாசம் மக்கள் பேரவை தலைவர் கணேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக