காரைக்குடியில் LIC ஊழியர்கள் காரைக்குடி அலுவலகத்தில் ஒருமணி நேர வெளிநடப்பு போராட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள LIC கிளை அலுவலகத்தில் ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது. கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தி காலிப் பணியிடங்களை நிரப்பிடு! *மூன்றாம், நான்காம் பிரிவு ஊழியர் பணி நியமனத்தை உடனே துவக்கிடு! AIIEA -விற்கு சங்க அங்கீகாரம் வழங்கிடு.ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார், சிறப்புரை தோழர் செயலாளர் நெல்லியான் ஆற்றினார். வாழ்த்துரை பென்சன் சங்க தோழர் காசிலிங்கம் வழங்கினார்.பென்சன் சங்க செயற்குழு உறுப்பினர் சங்கரேஸ்வரன் மற்றும் தோழர்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக