தூத்துக்குடி மாவட்டம் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக E-Challan வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்தப்பட வேண்டும் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி மாவட்டம் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக E-Challan வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்தப்பட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக E-Challan வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்தப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

மத்திய அரசு அறிவிக்கை எண். G.S.R. 584(E) நாள் 25.02.2020-ன்படி போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளால், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக E-Challan வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்தப்பட வேண்டும் எனவும், 

தவறும்பட்சத்தில் வாகனம் தொடர்பான எவ்வித பணிகளும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் செய்ய இயலாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், Parivahan Website-ல் நாளது தேதி வரையில் தங்களது அலைப்பேசி எண்களை பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள் ஆதார் அட்டை அடிப்படையில் உடனடியாக Parivahan Website-ல் உள்ள Online Service – Vehicle related Service-ல் உள்ள Mobile Number Update (Aadhaar Based)-ல் பதிவு செய்திடுமாறும் அவ்வாறு செய்ய இயலாதபட்சத்தில், 

வாகன உரிமையாளர் அலைப்பேசிக்கான உரிய அத்தாட்சியுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad