ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் கிராமத்தில் மாசிமாத திருவிழாவையையொட்டி இன்று மாபெரும் எருது விடும் விழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, இதில் எருதுவிடும் விழாவில், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணித்துளிகள் கடந்த காளையிற்கு முதல் பரிசாக 1 லட்சத்து 1 ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரத்து 1 ரூபாயும், மூன்றாவது பரிசாக 50 ஆயிரத்து 1 ரூபாய் என மொத்தம் 75 பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த எருதுவிடும் விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற நிலையில்,பாதுகாப்பு பணியில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் கடந்த திங்கட்கிழமை கிரிசமுத்திரம் பகுதியில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் பங்கேற்க வந்த காளை ஒன்று 6 கிலே மீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளத்திலேயே ஓடி சோலூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சான்றோர்குப்பம் ரயில்வே தண்டவாளம் அருகே ரயில்வே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்..
இருந்த போதிலும், சான்றோர்குப்பம் எருதுவிடும் விழாவில் பங்கேற்ற வந்த வேலூர் மாவட்டம். மேல்பட்டி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமான காளை கயிற்றை அவிழ்த்துகொண்டு, சான்றோர்குப்பம் பகுதியில் இருந்து தண்டவாளத்திலேயே ஓடி வந்த போது, சோலூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில், ரயில்மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து, ரயில் மோதி காளைகள் உயிரிழந்த சம்பவம் காளை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக