இராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
மும் மொழிக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தி திணிப்பை மத்திய அரசு திணிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட தலைமை தபால் நிலையம் (அரண்மனை )அருகே இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ,. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இளைஞரணி மாநில துணை செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.கே. பவானிராஜேந்திரன், இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர். கே.கார்மேகம் துணை தலைவர் டி.ஆர்.பிரவின்தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக