ஜாக்டோ ஜியோ போராட்திற்கு வலிமைசேர்க்க இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 5 பிப்ரவரி, 2025

ஜாக்டோ ஜியோ போராட்திற்கு வலிமைசேர்க்க இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்!


வேலூர் , பிப் 5 -

வேலூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்ட நடவடிக்கைகளை அறிவித் துள்ள நிலையில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி-6ஆம் தேதி  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக் கப்படுவதுடன் ஜாக்டோ ஜியோ போராட்டங்களை மிக தன்னெழுச்சியுடன் நடத்துவது எனவும் வலிமை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கானொலி வழியாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் தலைமை தாங்கினார்.  அகில இந்திய செயலாளர் மற்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் வரவேற்று பேசினார். அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சிறப்புத்தலைவர் அ.மாயன், பொதுசசெயலாளர் சி.ஜெயக்குமார், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் உதயசூரியன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க துனை பொதுச் செயலாளர் சிவஶ்ரீரமேஷ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன்  ஆகியோர் பங்கேற்று பேசினர்.வேலூர் மாவட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜோசப் அன்னையா, இணை ஒருங்கிணைப் பாளர்கள் ஆர்.ஜெயக்குமார், எம்.எஸ்.செல்வகுமார், கே.சங்கர், கே.குணசேகரன் ஆகியோர் பேசினர்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட
 தீர்மானங்கள்  

ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி-6ஆம் தேதி  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதுடன் ஜாக்டோ ஜியோ போராட்டங்களை மிக தன்னெழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14.02.25 தமிழ்நாடு முழுவதும் வட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பாக ஆர்ப்பாட்டம் அனைத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்துவது என்ன முடிவாக்கப்பட்டது..
25.02.25 மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் மிகவும் சக்தி வாய்ந்த முறையில் ஒட்டு மொத்த ஆசிரியர் அரசு ஊழியர்களையும் ஒருங்கிணைத்து நடத்துவது என முடிவாக்கப்பட்டுள்ளது..
ஜாக்டோ ஜியோ முடிவுகளை அமல்படுத்துவதற்கு சங்கங்கள் அவரவர்கள் தளத்தில் விரிவான அறிக்கைகள் மூலம் களத்தை தயார்படுத்துவது, மாவட்டங்களில் பிரச்சாரங்களை சிறப்பாக வலுவாக கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad