சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமமும், தாவரவியல் துறையும் இணைந்து நடத்திய காலநிலை நெருக்கடி குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத் தலைவருமான முனைவர் கோமளவல்லி தலைமை வகித்தார். தாவரவியல் துறையின் உதவிப் பேராசிரியர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். விருதுநகர் மாவட்டம் காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை முயற்சிக்கான தொண்டு நிறுவனத்தின்(CRSI) திட்ட அலுவலர் ராஜலட்சுமி காலநிலைக் கல்வி மற்றும் செயல்பாடுகள் என்ற தலைப்பில் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து கருத்துரையாற்றினார். மாநில சுற்றுச்சூழல் செயல்பாட்டு ஆலோசகர் (UNICEF/TNGCC) அவினாஷ் திரவியம் காலநிலை மாற்றமும் இயற்கை சார்ந்த தீர்வுகளும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வுகள் குறித்தும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் தாவரவியல் துறைப் பேராசிரியர்கள் அன்பழகன், கோபிநாத், வேல்முருகன், உமா மகேஸ்வரி ஆகியோரும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக